நடிகை அனுஷ்கா மற்றும் விராட் கோலிக்கு லீகல் நோடீஸ்!

ஜூன் 24, 2018 746

மும்பை (24 ஜூன் 2018): நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு அர்ஹான் சிங் என்பவர் லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மும்பை வீதியில் அனுஷ்கா காரில் சென்று கொண்டிருந்த போது அர்ஹான் என்பவரை அனுஷ்கா பொது இடத்தில் கண்டித்தார். அதாவது குப்பையை வீதியில் வீசி எறிந்ததாக அவர் மீது அனுஷ்கா ஆவேசமாக பேசினார். இதனை விராட் கோலி வீடியோவாக எடுத்து இருவரும் சமூக வலைதளங்கலில் பரவ விட்டனர்.

இந்நிலையில் இந்த வீடியோவால் தான் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளனதாகவும் மேலும் பெரிதும் அவமானப் படுத்தப் பட்டதாகவும் நடிகை அனுஷ்காவுக்கும், கோலிக்கும் அர்ஹான் சிங் பல லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...