பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் - நடிகை பரபரப்பு புகார்!

ஜூன் 25, 2018 985

ஐதராபாத் (25 ஜூன் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் இண்டெர்வியூவில் சில அசவுகரியங்களை சந்திக்க நேரிடுகிறது என்று நடிகை மாதவி லதா தெரிவித்துள்ளார்.

தமிழை போல தெலுங்கிலும் பிக்பாஸ் 2 தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க நடந்த இண்டெர்வியூ குறித்து நடிகை மாதவி லதா தெரிவிக்கையில், பிக் பாஸ் 2 தெலுங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை அணுகினார்கள். முதல் சீசனுக்கும் கூட என்னிடம் இன்டர்வியூ செய்தார்கள். அப்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எடுத்த இன்டர்வியூ முழுக்க எனக்கு அசவுகரியமாக இருந்தது." என்று தெரிவித்துள்ளார்.

அசவுகரியம் என்பது சினிமாவில் நடப்பது போல நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...