பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் என்ன கன்றாவியெல்லம் அரங்கேறுமோ!

ஜூன் 27, 2018 1748

சென்னை (27 ஜூன் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர் மஹத் பெண் பங்கேற்பாளர்களுடன் நெருக்கமாகி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மும்தாஜ், பொன்னம்பலம், மஹத், டேனியல், ஜனனி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 16 பேர் பங்கேற்றுள்ளனர். பிக்பாஸ் 2 ஆரம்பித்த இந்த 8 நாட்களில் ஒவ்வொருவரின் உண்மை முகங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பாலாஜியுடன் வெளியில் சண்டையிட்டு பிரிந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நித்யாவுடன் அமர்ந்து சாப்பிட்டு நெருங்கி வருகிறார். இதைதொடர்ந்து இரவில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் பெண்கள் அறைக்கு சென்ற மஹத், யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடுவே படுத்துக் கொண்டார். தூரத்திலிருந்து இதை கவனித்து விட்ட பாலாஜி அறைக்குள் வந்து “என்னடா பண்ணிட்டுருக்க? மோசமான ஆளா இருக்கியே” என்று மஹத்தை அங்கிருந்து கிளப்பப் பார்த்தார். ஆனாலும் அங்கிருந்து மஹத் கிளம்பவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...