பிரபல நடிகர் சஞ்சை தத்தின் வாழ்க்கை வரலாறு சஞ்சு என்ற பெயரில் படமாக்கப் பட்டுள்ளடு. ராஜ்குமார் ஹிரானி இதனை இயக்கியுள்ளார். இப்படம் வெள்ளியன்று ரிலீஸ் ஆகிறது. ரன்பிர் கபூர் கதா நாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சஞ்சய் தத் போதைப் பொருளுக்கு அடிமையாகி மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். போதைப் பொருள் வாங்க அவர் தெருவில் பிச்சை எடுத்துள்ளார் என்று ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் போதைப் பொருள் கொடுங்க என்று அதை விற்பனை செய்தவர்களிடம் எல்லாம் கெஞ்சியிருக்கிறார் சஞ்சய் தத். அதன் பிறகு 12 நாட்கள் நடந்தே ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். நண்பரிடம் பணம் கடன் வாங்கி போதைப் பொருள் வாங்க அங்கு சென்றார் என்கிறார் ரன்பிர் கபூர்.