நடிகர் ஆர்யாவுக்கு பிடி வாரன்ட்!

June 30, 2018

சென்னை (30 ஜூன் 2018): அவன் இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான படம் 'அவன் இவன்'. ஆர்யா, விஷால் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை தவறாக சித்தரித்ததாக அப்போதே பெரும் சர்ச்சை எழுந்தது.

இதனைத்தொடர்ந்து, சிங்கம்பட்டி ஜமீனை மோசமாக சித்தரித்ததற்காக நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணைக்காக நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டது. எனினும் அவர்கள் ஆஜராகவில்லை.

பின்னர், பல்வேறு காலகட்டங்களில் நடந்த விசாரணையின்போது ஆஜராகுமாறு உத்தரவிட்டும் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில், நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு எதிராக அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!