ரஜினி பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

ஜூலை 01, 2018 771

சென்னை (01 ஜூலை 2018): ரஜினியை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய ஆர்.தியாகராஜன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

பிரபல தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பாவின் மருமகன் இயக்குனர் ஆர். தியாகராஜன்(75). சென்னை போரூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகராஜன் ரஜினிகாந்தை வைத்து ரங்கா, தாய் வீடு, அன்புக்கு நான் அடிமை மற்றும் பிறர் நடித்து புகழ் பெற்ற ஆட்டுக்கார அலமேலு உள்ளிட்ட 28 படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...