எஸ்.ஜானகி குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!

ஜூலை 02, 2018 849

திருவனந்தபுரம் (02 ஜூலை 2018): பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள பின்னணி பாடகர் சங்கத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறு வந்த அவர் உடல்நலம் பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து அவரது உடல்நலம் குறித்து வதந்திகள் பரவத் தொடங்கின. இதைத்தொடர்ந்து தான் நலமாக இருப்பதாக எஸ்.ஜானகி தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மலையாளத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் சங்கத்தினர் கேரள போலீசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வதந்தி பரப்பியவர்களைக் கைது செய்யும்படி சைபர் கிரைம் போலீஸுக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்னாத் பெஹரா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் எஸ்.ஜானகி உடல்நிலை குறித்த வதந்தி பரப்பியவர்கள் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...