பிக்பாஸ் போட்டியாளர் நள்ளிரவில் கைது!

ஜூலை 03, 2018 854

பஞ்சாரா ஹில்ஸ் (03 ஜூலை 2018): பிக்பாஸ் தெலுங்கு வெர்சன் சீசன் 1 ல் பங்கேற்ற கத்தி மகேஷ் என்பவர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

கத்தி மகேஷ் மீது துணை நடிகை ஒருவர் பாலியல் குற்றச் சாட்டு வைத்திருந்தார். இது ஒருபுறம் இருக்க ஆந்திர மக்களின் கடவுள்களில் ஒருவரான ஸ்ரீராமன் குறித்து சர்ச்சையாக எழுதியதாகவும் கத்தி மகேஷ் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டது.

இவ்விரு வழக்குகளை பதிவு செய்த போலீசார் அவரை நேற்று நள்ளிரவு கைது செய்து பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...