என்னை தனியாக ரூமுக்கு வர சொன்னார்கள் - பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு!

ஜூலை 04, 2018 1728

சென்னை (04 ஜூலை 2018): சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தொடரத்தான் செய்கிறது என்று நடிகை ஆம்னி தெரிவித்துள்ளார்.

விஜய்காந்தின் ஹானஸ்ட் ராஜ் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஆம்னி, இவர் சமீபத்தில் சினிமா துறை மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் நடிக்க வந்த புதிதில் புதிய தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து போன் அழைப்புகள் வந்தன. என்னை தனியாக கெஸ்ட் ஹவுஸுக்கு வரச் சொன்னார்கள். அவர்கள் எதற்காக அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டதால் நான் செல்லவில்லை என்றார் ஆம்னி.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்த நிலையில் ஆமனி அதை உறுதி செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...