நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிப்பு!

ஜூலை 04, 2018 1190

நியூயார்க் (04 ஜூலை 2018): பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோய் பாதிப்பால் அவதியுற்று வருவதாக அவரது ட்விட்டர் பதிவி தெரிவித்துள்ளார்.

காதலர் தினம் படத்தில் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டவர் சோனாலி பிந்த்ரே, இந்தியில் கொடிகட்டிப் பறந்த நடிகை இவர். இந்நிலையி அவர் புற்று நோயால் பாதித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சில நேரங்களில் நீங்கள், வாழ்வில் எதிர்பார்ப்பது நடப்பது இல்லை. சமீபத்தில் எனக்கு அபாயாகரமான புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் வலி தரும் பல சோதனைகள் செய்யவேண்டி இருந்தது. இந்த சோதனை மூலம் அபாயமான புற்று நோய் இருப்பது தெரியவந்தது. எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் எனக்கு ஆதரவு வழங்குவதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் தற்போது நியூயார்க்கில் சிகிச்சைக்கு வருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தகவல் அறிந்த இந்தி திரையுலகினரும் ரசிகர்களும் சோனாலி பிந்த்ரேவுக்காக பிரார்த்திப்பதாக அவருக்கு பதிலளித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...