டிரைலருக்கு பதில் முழு திரைப்படமும் யூடூபில் வெளியானதால் அதிர்ச்சி!

ஜூலை 05, 2018 1049

நியூயார்க் (05 ஜூலை 2018): ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதற்கு பதிலாக, முழு திரைப்படத்தை யூ-ட்யூபில் வெளியிட்டது சோனி பிக்சர்ஸ் நிறுவனம். சில மணி நேரங்களுக்குப் பின்னர் அதனை யூ டூபிலிருந்து நீக்கியுள்ளது.

‘காலி-தி கில்லர்’ என்ற ஹாலிவுட் படத்தின் டிரெய்லர் வெளியாகவிருந்த நிலையில். இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சோனி, டிரெய்லரை வெளியிடுவதற்கு பதில் தவறுதலாக, முழு திரைப்படத்தையும் யூ-ட்யூபில் வெளியிட்டது.

89 நிமிடங்கள் கொண்ட அந்த முழு திரைப்படம் 8 மணி நேரத்திற்கும் மேல் யூ-ட்யூபில் இருந்தது. அப்போது இந்தத் திரைப்படத்தை, பலர் கண்டுள்ளனர். பிறகு இந்தப் படம் இணையத்தில் இருந்து நீக்கப் பட்டது. இந்த விவகாரம் ட்விட்டரில் வைரலானது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...