பிரபல தமிழ் இயக்குநர் குறித்து பிரபல நடிகை பாலியல் புகார்!

July 08, 2018

ஐதராபாத் (08 ஜூலை 2018): தெலுங்கு படவுலகில் பிரபல நடிகர்கள் இயக்குநர்கள் என பாலியல் புகார் அளித்து நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இங்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர் பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன். இந்த ஒரு விஷயத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்." என்றார்.

நடிகை ஸ்ரீரெட்டி அளித்துள்ள இந்த புகாரால் யார் அந்த இயக்குநர் என்ற கேள்வி தமிழ் திரைப்பட உலகில் எழுந்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!