லதா ரஜினிகாந்த் மீது உச்ச நீதிமன்றம் காட்டம்!

ஜூலை 10, 2018 779

புதுடெல்லி (10 ஜூலை 2018): லதா ரஜினிகாந்த் மீது போடப் பட்டுள்ள வழக்கை லதா ரஜினி சந்தித்தே ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

கோச்சடையான் படத்தை தயாரித்தது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் நிறுவனத்திற்கு ஆட்பீரோ என்ற நிறுவனம் கடன் அளித்திருந்தது. இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார். கடனை திருப்பிச் செலுத்தாதால் ஆட்பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கை தடை விதிக்குமாறு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த மனு செய்திருந்தார். உயர் நீதிமன்றமும் அதற்கு தடை விதித்திருந்தது. எனவே விளம்பர நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தது. இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம் “ இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. நீங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவீர்கள் என்று எண்ணி தான், நாங்கள் இந்த வழக்கை தாமதமாக எடுத்தோம். நீங்கள் வழக்கை எதிர்கொள்ளுங்கள், நிரபராதியாக இருந்தால் விடுவிக்கப்படுவீர்கள்” என்று கொஞ்சம் காட்டமாகவே கூறியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...