திரைப்பட கதாநாயகியாகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது சமியின் மனைவி!

ஜூலை 10, 2018 675

மும்பை (10 ஜூலை 2018): பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது சமியின் மனைவி ஹசின் ஜஹான் பாலிவுட் திரைப்படத்தில் கதா நாயகியாக நடிக்கவுள்ளார்.

கிரிக்கெட் வீரர் முஹம்மது சமிக்கும், முன்னாள் மாடல் ஹசின் ஜஹானுக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் ஹசின் ஜஹான் பாலிவுட் இயக்குநர் அம்ஜத் கானின் புதிய படமன ஃபத்வா என்ற படத்தில் ஊடகவியலாளராக நடிக்கவுள்ளார். சமீபத்தில் போட்டோ சூட் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஹசின் ஜஹான் திரைப்படத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...