இந்தி படத்தை இயக்கி நடிக்கும் டி.ராஜேந்தர்!

ஜூலை 10, 2018 611

சென்னை (10 ஜூலை 2018): டி.ராஜேந்தர் ‘இன்றைய காதல்டா’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இதனை இந்தியிலும் எடுக்கவுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், கவண் திரைப்படத்திற்கு பின் பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் மறுத்துவிட்டேன். கவணை தொடர்ந்து கவனத்தை ஈர்க்க இன்றைய காதல் டா என்ற இந்த புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். அதனை நானே இயக்கி தயாரிக்கிறேன். இந்த படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிப்பதாகவும், பல புதுமுகங்களை இதில் அறிமுகப் படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் விஜய்க்கு ஆதரவாக பேசிய அவர் சிகெரட் பிடிக்கும் போஸ்டரை காரணம் காட்டி அதனை கண்டிப்பது ஏற்புடையதல்ல. அவர் தமிழர் என்பதால் இதனை செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...