இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் குறித்து பிரபல நடிகை இட்டுள்ள அதிர வைக்கும் ஃபேஸ்புக் பதிவு!

ஜூலை 11, 2018 677

சென்னை (11 ஜூலை 2018): இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் போஸ்ட் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகை அதிர வைத்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் "ஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ் ஜி...நலமா? கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா?? வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். பட வாய்ப்பு அளிப்பதாக வாக்களித்தீர்கள். ஆனால் நமக்கு இடையே நிறைய....இதுவரை நீங்கள் எனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை...நீங்களும் சிறந்தவர் சார்..." என்று ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

ஏற்கனவே விஜய் நடிக்கும் சர்க்கார் பட போஸ்டர் பிரச்சனை ஒருபுறம், அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டியின் போஸ்டால் திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான கத்தி படமும் ஏ.ஆர்.முருகதாஸ் கதை அல்ல என்பது ஏற்கனவே சர்ச்சையானது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...