நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து பிரபல நடிகை பகீர் பதிவு!

ஜூலை 12, 2018 982

ஐதராபாத் (12 ஜூலை 2018): தெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் பெயரை வெளியிட்டுள்ளார்.

பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களையும், புகைப் படங்களையும் செல்போன் குறுந்தகவல்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார். இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியுடன் யாரும் நடிக்கக் கூடாது என்று தடை விதித்தது. இதையடுத்து மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தின் தலையீட்டால் ஸ்ரீரெட்டி படங்களில் நடிக்க விதித்திருந்த தடையை நீக்கி ஸ்ரீரெட்டி தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் என்று தெலுங்கு நடிகர் சங்கம் அறிவித்தது.

தெலுங்கு திரையுலகின் பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார் அளித்ததால் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டது. இதையடுத்து தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முருகதாஸ் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறிவிட்டு பின்பு தரவில்லை என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஸ்ரீரெட்டி, இப்போது தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் மீது பகிரங்கமாக பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...