உங்களுக்கு அதில விருப்பமா? - நடிகைக்கு வலை விரித்த விபச்சார கும்பல்!

ஜூலை 13, 2018 920

சென்னை (13 ஜூலை 2018) பாலியல் தொழிலில் ஈடுபடுத்த நடிகைக்கு வலைவிரித்த விபச்சார கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாட்ஸ்-ஆப் மூலம் பாலியல் தொழிலுக்கு வலை வீசுவதாக நடிகை ஜெயலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஜெயலட்சுமியின் வாட்ஸ்-ஆப் எண் மூலமாக சாதூர்யமாக பேசி அண்ணா நகரில் உள்ள காபி ஷாப்பிற்கு அந்த கும்பலை போலீசார் வரவழைத்தனர். அப்போது கூண்டுக்குள் சிக்கிய எலியை போல, காபி ஷாப்பிற்கு வந்த கவியரசன், முருகபெருமாள் ஆகிய இருவரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

ரிலேசன்ஷிப் சர்வீஸ் என்ற பெயரில் குழு அமைத்து, நடிகைகளுக்கு பாலியல் வலை வீசி முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து படைத்துள்ளது இந்த கும்பல். அரசியல் பிரமுகர்கள், விஐபி, விவிஐபி என பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, முக்கிய பிரமுகர்களுடன் டேட்டிங் செல்ல விருப்பமா? இதற்கான ஏற்பாட்டை தாங்களே செய்து தருகிறோம்? இதன்மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி வாட்ஸ்-ஆப் மூலம் மெசேஜ் அனுப்புகின்றனர். அதிலும் நடிகைகளையே குறிவைக்கிறது இந்தக் கும்பல்.

6 மணி நேரம், 12 மணி நேரம், வெளிமாநிலங்களுக்கு சென்றால் ஒரு தொகை என லட்சக்கணக்கில் பேரம் பேசி நடிகைகளை தங்களது வலைக்குள் சிக்க வைக்கிறது இந்த கும்பல். இப்படி பல நடிகைகளை பாலியல் தொழிலில் தள்ளிய இந்த கும்பல், நடிகை ஜெயலட்சுமியிடம் மெசேஜ் அனுப்பி சிக்கிக் கொண்டனர். பிடிபட்ட இருவரிடமும் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...