ஆதாரங்களை வெளியிடுவேன் - நடிகை ஸ்ரீரெட்டி விஷால் பரபரபு மீது புகார்!

ஜூலை 14, 2018 805

சென்னை (14 ஜூலை 2018): தெலுங்கு படவுலகில் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் ஸ்ரீரெட்டி வெளியிட்டு வரும் பட்டியலில் இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் தமிழ் சினிமா பிரபலங்களைப் பற்றி புகார்களை கூறி வரும் ஸ்ரீரெட்டி, தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தமிழ் சினிமாவில் இருக்கும் கருப்பு பக்கங்களை வெளிக் கொண்டு வருவேன் என ஸ்ரீரெட்டி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் தனக்கு நிகழ்ந்ததை வீடியோவாக வெளியிட்ட ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவில் தான் கூறும் புகார்களுக்கான ஆதாரங்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...