ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி விஷால் ரெட்டி!

ஜூலை 14, 2018 637

ஐதராபாத் (14 ஜூலை 2018): தெலுங்கு படவுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது தமிழ் படவுலகின் பிரபலங்களை குறி வைத்து பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சென்னை ஹோட்டல் ஒன்றில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பிரபல இயக்குநர் முருகதாஸ் மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் மீது குற்றம் சாட்டினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது புதிய புகார் ஒன்றைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி. இந்தப் பதிவில் ராகவா லாரன்ஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து விளக்கமாகத் தெரிவித்திருந்தார் அவர்.

தற்போது நடிகர் விஷால் தனக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...