அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி!

ஜூலை 15, 2018 699

சென்னை (15 ஜூலை 2018): ’தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் பாலியல் புகார்களை வெளியிட்டு வரும் ஸ்ரீரெட்டி இன்று மீண்டும் ஒரு நடிகரின் பெயரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, இதையடுத்து தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த ஸ்ரீரெட்டி தமிழ் சினிமா பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரண்ஸ் ஆகியோரின் பெயர்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி வெளியிட்டிருந்த நிலையில் தற்போது நெஞ்சில் துணிவிருந்தால், மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்பதிவில் இந்த பூமியில் சந்தீப் மிகவும் மோசமான மனிதர் என ஸ்ரீரெட்டி குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...