சினிமாவுக்கு மட்டும்தான் சென்சாரா?

ஜூலை 20, 2018 807

சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டி சினிமாவில் வரும் மோசமான வசனங்களை விட மோசமாக உள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, இதையடுத்து தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த ஸ்ரீரெட்டி தமிழ் சினிமா பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரண்ஸ் ஆகியோரின் பெயர்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நடிகை ஸ்ரீரெட்டி விஷால், இயக்குநர் சுந்தர் சிசி மீதும் புகார் அளித்தார்.

ஸ்ரீரெட்டியின் இந்த திடீர் பரபரப்பு தகவல் மக்களை வேறு எண்ணத்திற்கு மாற்றும் ஒரு அரசியல் யுக்தியாக இருக்கக் கூடும் என்ற பேச்சும் நிலவுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து தொலைக் காட்சிகளும் அவரை பேட்டி எடுத்து வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் முகம் சுழிக்கும் வகையில் அமைந்துள்ளதுதான் கொடுமை. ஏற்கனவே டிவி சீரியல்கள், பிக்பாஸ் இன்னும் டான்ஸ் நிகழ்ச்சி என சமூக சீர்கேட்டு நிகழ்ச்சிகளால் தொலைக்காட்சி சேனல்கள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஸ்ரீரெட்டி யின் பேட்டியில் காதில் கேட்க கூசும் அனைத்து அம்சங்களும் அடங்கியுள்ளன. சினிமாவில் அரசியல் வசனங்களுக்கு மியூட் போட்டு அல்லது பீப் போட்டு மட்டுறுத்தும் சென்சார் தொலைக்காட்சிக்கு இல்லாதது வேதனை.

வீடுகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அமர்ந்து தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை பார்த்து வரும் நிலையில் ஸ்ரீரெட்டி போன்றவர்களின் பேட்டிகளை கொஞ்சம் கூட கூசாமல் அப்படியே முன்னணி தொலைக் காட்சிகள் வெளியிடுவது ஏற்புடையதல்ல என்று குமுறுகின்றனர் பொதுமக்கள்.

வன்புணர்வு சம்பவங்களும் படுகொலைகளும் தமிழகத்தில் அதிகரித்துவிட்ட நிலையில் அதனை தடுக்க ஊடகங்கள் தன் முன்னெடுப்பை எடுக்க வேண்டும் அல்லாமல் ஸ்ரீரெட்டி போன்ற சீர்கெட்ட விவகாரங்களில் ஊடகங்கள் கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதே பொதுப் பார்வை.

தல தளபதி

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...