சினிமா காரர்களின் ஈன புத்தி - நடிகை கஸ்தூரி விளாசல்!

ஜூலை 21, 2018 722

சென்னை (21 ஜூலை 2018): நடிகை ஸ்ரீரெட்டியின் பேட்டி குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரண்ஸ் உள்ளிட்ட நபர்கள் மீது புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டியின் புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை பதிலளிக்கவோ, மறுப்பு தெரிவிக்கவோ இல்லை.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி தெரிவித்து வரும் புகார்கள் குறித்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சினிமா ஆசை காட்டி தங்கள் ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக் கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை ஸ்ரீரெட்டி கிழித்து தொங்கபோட்டுக் கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். இவர் கூடவா என்று சிலர் பெயரை கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது, ஆனால் அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சான்ஸ் கிடைத்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார். சினிமாவை மிக தவறாக எடைபோட்டதன் விளைவையே ஸ்ரீரெட்டி இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...