விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஜாக்பாட்!

ஜூலை 21, 2018 849

சென்னை (21 ஜூலை 2018): விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஐ.ஏ.ஆர்.எ. என்ற சர்வதேச விருது பரிந்துரை பட்டியலில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயர் இடம்பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. இப்படம் வெளியான ஒரு சில நாட்களில் படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்பு படத்திற்கு கூடுதல் விளம்பரமாய் மாறிப் போனது. இதனால் படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது. இதன்படி இப்படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பரிந்துரை பட்டியல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2014 - ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார்.

இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் பெற்ற நடிகர்களுக்கு விருது வழங்கப்படும் எனத் தெரிகிறது. உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஏஜென்ட் திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, சில்ட்ரன்ஸ் ஆப் லெஸ்ஸர் காட் நடிகர் ஜோஷுவா ஜாக்சன், சைட் சிக் கேங் நடிகர் அட்ஜெட்டே அனாங், எல் ஹெபா எல் அவ்டா நடிகர் ஹசன் மற்றும் தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல் பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...