ஸ்ரீதேவி இதுக்குத்தான் மகளை நடிக்க வைக்க பயந்தாராம்!

ஜூலை 24, 2018 902

மும்பை (24 ஜூலை 2018): மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிகையாகிவிட்டார். ஆனால் ஸ்ரீதேவி விரும்பியதோ வேறு.

ஜான்வி நடிப்பில் கடந்த வாரம் வெளியான முதல் படமான தடக் ரூ. 50 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ஜான்வியை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இது ஜான்விக்கு முதல் படம் என்பதை மறந்து ஸ்ரீதேவி அளவுக்கு இல்லை என்கிறார்கள்.

தன்னை தன் தாயுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று ஜான்வி கபூர் கேட்டுக் கொண்டும் பலனில்லை. இந்நிலையில் போனி கபூர் இதுகுறித்து தெரிவிக்கையில், ஜான்வியை ஸ்ரீதேவியுடன் ஒப்பிடுகிறார்கள். இது நடக்கும் என்று எங்களுக்கும் தெரியும். ஸ்ரீதேவிக்கும் தெரியும், அதனால் தான் அவர் மிகவும் கவலைப்பட்டார். ஜான்வியை டாக்டராக்க ஆசைப் பட்டார். எனினும் இது போன்று நடக்கும் என்று எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள ஜான்வியை தயார் செய்தார் என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...