திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி!

ஜூலை 26, 2018 558

சென்னை (26 ஜூலை 2018): பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மணிரத்னத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

62 வயதான இவர் 1983ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 35 வருடங்களாக திரைத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழில் 26 படங்களையும் இந்தியில் 6 படங்களையும், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படங்களையும் இயக்கியுள்ளார்.

இவருடைய இயக்கத்தில் இறுதியாக 'காற்று வெளியிடை' படம் வெளியானது. தற்போது இவர் செக்க சிவந்த வானம்' என்ற மல்டி ஸ்டார் படத்தை இயக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...