ஜுங்கா - திரைப்பட விமர்சனம்

ஜூலை 27, 2018 1520

விஜய் சேதுபதியின் படங்களுக்கு தனி மவுசு உண்டு. கதை எப்படி இருந்தாலும் அதனை வேறு பார்வைக்கு கொண்டு சென்று விடுவார்.

ஜுங்கா (விஜய் சேதுபதி) தாத்தா, அப்பா இருவருமே கேங்ஸ்டர்கள். தங்களை பெரிய தாதாவாக நினைத்து தங்களிடம் இருக்கும் பணம், சொத்து, தியேட்டர் என்று எல்லாவற்றையும் இழக்கிறார்கள். கண்டக்டராக இருக்கும் விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் தன் அப்பா, தாத்தா பற்றிய கதையை அறிகிறார். அவர்கள் இழந்த தியேட்டர் குறித்து அறிகிறார். உடனே அந்த தியேட்டரை மீட்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் ஜுங்கா.

நடுவில் வரும் பிரச்சனைகளை சமாளித்து ஜுங்கா தன் அப்பா இழந்த தியேட்டரை மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

எல்லா படம் போல தனக்கு கொடுத்த வேடத்தை சரியாக செய்துள்ளார். அதோடு யோகி பாபுவின் கூட்டணியில் வரும் காட்சிகள் எல்லாம் அசத்தல், காமெடிக்கு பஞ்சமே இல்லை. சரண்யா-பாட்டி காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.

அந்த தியேட்டரை மீட்க காமெடி கேங்ஸ்டராக நிறைய விஷயங்கள் செய்கிறார். ஒரு சில பார்க்க ஏற்றதாக இருந்தாலும் சில விஷயங்கள் இப்படியெல்லாம் செய்வார்களா என்று யோசிக்க வைக்கிறது, ஆனால் காமெடி கலந்து இருப்பதால் தவறாக தெரியவில்லை.

விஜய் சேதுபதிக்காகவே பார்க்கலாம்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...