பிரபல நடிகையின் மகள் தற்கொலை!

July 29, 2018

ஐதராபாத் (29 ஜூலை 2018): பிரபல தெலுங்கு நடிகையின் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருபவர் அன்னபூர்ணா. அவரின் மகள் கீர்த்தி(35). மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்திக்கும், வெங்கடகிருஷ்ணா என்ற சாப்ட்வேர் என்ஜினியருக்கும் திருமணம் நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தார் கீர்த்தி. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் அவர் நேற்று காலை தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தாய் அன்னபூர்ணா போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!