அய்யய்யோ நான் அப்படிப் பட்டவன் இல்லைங்க - யோகி பாபு பதறல்!

ஜூலை 29, 2018 831

சென்னை (29 ஜூலை 2018): துணை முதல்வர் ஓ.பி.எஸ் குறித்தும் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் நான் பதிவிடவில்லை என்று நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக கோபால புரம் இல்லத்தில் கருணாநிதியை துணை முதல்வர் ஓபிஎஸ் சென்று உடல் நலம் விசாரித்தார். இதனை யோகி பாபு கிண்டலாக, ஓபிஎஸ்ஸை கருணாநிதி உடல் நலம் விசாரித்தார் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ள யோகி பாபு, நான் அப்படி பதிவிடவில்லை என்றும் என் பெயரில் வேறு யாரோ போலி கணக்கு தயார் செய்து அவ்வாறு பதிவிட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...