வசமா மாட்டிகிட்டார் லாரன்ஸ் - பிரபல நடிகை பதிலடி!

July 30, 2018

சென்னை (30 ஜூலை 2018): தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறி வரும் நடிகை நடிகர் லாரன்ஸ் சவாலை ஏற்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு பட உலகில் கிளப்பிய புயலைத் தொடர்ந்து தற்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி 'தமிழ் லீக்ஸ்' என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இதையடுத்து ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ், தான் ஏற்பாடு செய்யும் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஸ்ரீரெட்டி அனைவரின் முன் நடித்தும், நடனமாடியும் தன்னை நிரூபித்தால், தான் அடுத்து இயக்கும் படத்தில் வாய்ப்பு தருவதாக விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டியிடன் நாம் இதுகுறித்து கேட்டபோது.... "நான் எந்த படம் என்று சொல்வதற்கு முன்னால் அது 'ரிபெல்' படம் என்று லாரன்சிற்கு எப்படி தெரியும்...? இதில் இருந்தே தெரியவில்லையா அவருக்கு இதில் சம்பந்தம் உள்ளதா இல்லையா என்று. மேலும் அவர் தங்கியிருந்த கோல்கொண்டா ஹோட்டல் ஊழியர்களையும், படக்குழுவினரையும் கேட்டாலே தெரியும் அவர் அறையில் ருத்ராட்ச மாலையும், குரு ராகவேந்திரா சாமிகள் படம் இருந்ததா இல்லையா என்று. அது மட்டுமில்லாமல் என்னோடு சேர்ந்து என் தோழியும் இவரிடம் அதேபோல் பாதிக்கப்பட்டுள்ளார். வேண்டுமானால் லாரன்ஸ் அப்படி பிரஸ் மீட் வைக்கும் பட்சத்தில் அதில் என் தோழியும் கலந்துகொண்டு இன்னும் தெளிவுப்படுத்துவார். எனக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம் அதே குரு ராகவேந்திரா சுவாமிகளுக்கு தெரியும் லாரன்ஸ் தவறு செய்தாரா இல்லையா என்று. ஒரு நாள் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

Search!

ஓட்டு போட்டாச்சா?

சின்மயி, 14 வருடங்கள் கழித்து வைரமுத்துவை சாடுவது?
  • Votes: 0%
  • Votes: 0%
Total Votes:
First Vote:
Last Vote:

தற்போது வாசிக்கப்படுபவை!