மகன் யுவனை முன் வைத்துக் கொண்டு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா?

ஜூலை 31, 2018 1104

சென்னை (31 ஜூலை 2018): எலக்ட்ரானிக் இசையை கைவிட்டு உண்மையான இசைக்கருவிகளை உபயோகிக்க வேண்டி இளம் இசையமைப்பாளர்களுக்கு யுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். "120 படங்கள் இசையமைத்திருக்கிறேன், ஆனால் எந்த ஒரு படத்தின் விழாவுக்கும் என் அப்பா வந்ததே இல்லை. நான் வந்து உன்னை ப்ரமோட் பண்ண மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டார். இப்போது படம் தயாரிச்சிருக்கேன் வாங்கனு சொன்னேன். வந்திருக்கார்" என்று தனது தந்தையை யுவன் வரவேற்றார்.

பின்னர் மேடைக்கு வந்த இளையராஜா யுவனை வாழ்த்தினார். எலக்ட்ரானிக் கருவிகளை விட்டுவிட்டு, உண்மையான இசைக் கருவிகளை உபயோகித்தால் தான் ஆன்மாவை எழுப்ப முடியும் என அவர் அறிவுரை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது, "பியார் பிரேமா காதலுக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன். இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்" என்று அவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...