அஜித் பட இயக்குநர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு!

ஆகஸ்ட் 02, 2018 635

சென்னை (02 ஆக 2018): நடிகர் அஜித், அர்ஜுன் ஆகியோரை வைத்து படம் இயக்கிய இயக்குநர் சிவக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயசு, அர்ஜூனின் ‘ஆய்த பூஜை’ ஆகிய படங்களை இயக்கிய சிவக்குமார் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர். இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து பின்பு இயக்குநரானார். இவர் சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் அவரது வீட்டில் வசித்து வருகிறார். இதுவரை இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிவக்குமாரின் வீட்டிற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது சிவக்குமார் இறந்து கிடந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. உடலைக்கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...