பிரபல சினிமா பின்னணி பாடகி விபத்தில் மரணம்!

ஆகஸ்ட் 03, 2018 1176

கொச்சி (03 ஆக 2018): பிரபல சினிமா பின்னணி பாடகி மஞ்சுஷா (26) விபத்தில் மரணம் அடைந்தார்.

மலையாள ஸ்டார் சிங்கர் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் மஞ்சுஷா, அதன் மூலம் சினிமாவிலும், பல ஆல்பங்களிலும் பாடியுள்ளர். இந்நிலையில் கடந்த ஜுலை 27 ஆம் தேதி மஞ்சுஷாவும் அவரது தோழி அஞ்சனாவும், எர்னாகுளம் அருகில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இதில் மஞ்சுஷாவுக்கு உடல் நிலை மோசம் அடைந்ததை அடுத்து லக்‌ஷேஹூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் வியாழன் அன்று பிற்பகல் 1 மணிக்கு மஞ்சுஷா உயிரிழந்தார். மஞ்சுஷா மோகன்தாஸ் சிறந்த கிளாசிகல் டான்சரும் ஆவார்.

அவருடைய மரணம் கேரள இசை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...