பிரபல நடிகை கணவரால் சுட்டுக் கொலை!

ஆகஸ்ட் 09, 2018 643

நவ்ஷெரா (09 ஆக 2018): பாகிஸ்தான் பிரபல நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவாவில் நவ்ஷெரா கலான் பகுதியில் வசித்து வந்தவர் பாடகி ரேஷ்மா. இவர் அந்நாட்டில் புகழ் பெற்ற பேஷ்டோ பாடல்களை பாடி வந்துள்ளார். ஜோபல் கோலூனா என்ற பிரபல நாடகத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கணவரை பிரிந்து தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது வீட்டிற்குள் நுழைந்த கணவர் ரேஷ்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் ரேஷ்மாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இது பாகிஸ்தானின் கைபர் பக்துங்குவாவில் பெண் கலைஞர்களுக்கு எதிராக இந்த வருடத்தில் நடைபெறும் 15வது சம்பவம் ஆகும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...