விஸ்வரூபம் -2 எப்படி? - சினிமா விமர்சனம்!

ஆகஸ்ட் 10, 2018 1201

பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே விஸ்வரூபம் 1 முதல் பாகம் வெளியானது ஆனால் விஸ்வரூபம் -2 க்கு அப்படி எந்த எதிர்ப்பும் யாரும் காட்டவில்லை என்பதை விட யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.

படம் முதல் பாகத்தின் சில காட்சிகளை காட்டிவிட்டு படம் முழுவதும் முதல்பாகத்துக்கு முந்தைய காட்சிகளும், தற்போதைய காட்சிகளும் மாறி மாறி வருகின்றன.

முதல்பாதியில் கமல் எப்படி தீவிரவாதிகள் குருப்பில் இணைந்தார் என்பது தெளிவாக இருக்காது.

படம் தொடங்கியதுமே கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா அனைவரும் லண்டன் புறப்பட்டு செல்கின்றனர். அப்போது கமல் முன்பு நடந்ததை நினைத்து பார்க்கிறார். ராணுவத்தில் ஆண்ட்ரியாவுக்கு உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார் கமல். அப்போது அவருடன் காதல் செய்கிறார். அவருடன் தனியறைக்கு போவதுபோல நடிக்க இதனால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்புவதுபோல ஆப்கானிஸ்தானுக்கு தேடப்படும் குற்றவாளியாக செல்கிறார். அதன்பின் அங்கு வில்லன் உமருடன் அவர் செய்வதை முதல்பாகத்திலேயே பார்த்திருப்போம்.

பின்னர் உமர்க்கு உண்மை தெரிந்து அவர் அங்கிருந்து தப்பிய கதை எல்லாம் வருகிறது. நிகழ்காலத்தில் லண்டனுக்கு நேரவிருக்கும் பெரிய பேராபத்தை தடுக்கிறார். இதையடுத்து உமரின் மற்ற சதியை முறியடித்து அவரை கொன்றாரா என்பதே மீதிகதை.

சண்டைக்காட்சிகளுக்கு குறைவேயில்லை. முழுவதும் நிரம்பியிருக்கிறது. முதல் பாகத்தில் வந்த டிரான்ஸ்பமேஸன் சண்டையை மீண்டும் முயற்சி செய்துள்ளனர். டெக்னிக்கலாகவும் பல இடங்களில் Freezing Shot, ரிவர்ஸில் சென்று ஸ்லோமோஷனில் காட்டுவது என அசத்தியுள்ளனர்.

கமர்சியல் விஷயங்கள் அதிகமாக இல்லை. பாடல்களும் பெரியளவில் தொந்தரவாக அமையவில்லை. ஓரளவு சரியான இடத்திலேயே பொருந்துகிறது. அம்மாவாக நடித்தவர் பிரமாதம். நானாகிய நதிமூலமே என்ற அந்த பாடல் கொஞ்சம் எமோஷ்னலாகவே இருந்தது.

பாடல்கள் மனதில் நிற்கவில்லையென்றாலும் பின்னணி இசையில் அசத்தியுள்ளார் ஜிப்ரான். ஆனாலும் ஞாபகம் வருவதால் முதல் பாகத்திலிருந்த விறுவிறுப்பு ஏனோ மிஸ்ஸிங்.

நடிப்பை பொறுத்தவரையில் கமலைப்பற்றி சொல்லவே தேவையில்லை. மனுஷன் எல்லாகாட்சிகளிலும் பின்னுகிறார். ஆண்ட்ரியாவும் சண்டைக்காட்சியிலும் அசத்துகிறார். கடைசியில் இவரின் முடிவு கொஞ்சம் சோகத்தை ஏற்படுத்துகிறது. பூஜாகுமார் முதல் பாகத்தைவிட இதில் படம் முழுவதும் டிராவல் ஆகிறார். ரொமான்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.

வில்லனாக வந்த ராகுல்போஸ் இரண்டாம் பாதியில் தான் அவரின் காட்சி அதிகமாக வருகிறது.

மொத்தத்தில் முதல் பாதி படுபோர். இரண்டாம் பாதி பரவாயில்லை ரகம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...