விஸ்வரூபம் 2 படத்தின் எதிரி யார் என்று தெரியும் - கமல் ஹாசன்!

August 11, 2018

சென்னை (11 ஆக 2018): விஸ்வரூபம் 2 படத்தை முடக்க நினைப்பவர்கள் யார் என்று எனக்கு தெரியும் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் - 2 படம் நேற்று வெளியானது. படத்திற்கு மக்கள் வரவேற்பு அவ்வளவாக இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் படம் படுபோர் என்று பார்த்தவர்கள் விமர்சிக்கின்றனர்.

படம் தமிழகத்தில் பல இடங்களில் படம் வெளியானாலும், சில திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், சென்னையில் வணிக வளாகத்தில் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன், பல மாவட்டங்களில் படத்தை திரையிட விடாமல் சிலர் தடை ஏற்படுத்துவதாகவும், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தனக்கு தெரியும் என்றார்.

மேலும், திரைப்படங்கள் வாயிலாக கட்சி கொள்கையை முன் நிறுத்துவதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!