அந்த நியூஸ் உண்மையா? - நடிகை கஸ்தூரி விளக்கம்!

ஆகஸ்ட் 12, 2018 1057

சென்னை (12 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தான் பங்கேற்பது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 55 நாட்களை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நித்யா, ரம்யா, ஷாரிக், மமதி, அனந்த் வைத்தியநாதன் ஆகிய 5 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது . இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் நடிகை கஸ்தூரி, தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் , புற்றுநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாகவும், சுவாரஸ்யத்திற்காக இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...