நடிகை அமலா பால் மருத்துவ மனையில் அனுமதி!

August 14, 2018

கொச்சி (14 ஆக 2018): பிரபல நடிகை அமலா பால் காயம் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் வினோத் இயக்கி வரும் அதோ அந்த பறவை போல படத்தில் அமலா பால் நடித்து வருகிறார். இப்படத்தில் அமலாபாலுக்கு பல சண்டைக்காட்சிகள் உள்ளன. இந்நிலையில் சண்டைக்காட்சியில் நடித்தபோது அமலா பாலுக்கு அவரது வலது கையில் அடிபட்டுள்ளது.

அப்போது அமலாபால் வலி அதிகமானதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலது கையின் தசைநாரில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அமலா பாலை நன்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!