கேரள மழை வெள்ள நேரத்தில் சிக்கலில் சிக்கிய நடிகர் மம்மூட்டி!

ஆகஸ்ட் 16, 2018 746

திருவனந்தபுரம் (16 ஆக 2018): கேரளாவில் பெருமழை வெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் மம்மூட்டி புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்.

கேரளாவில் கடுமையான மழையின் தாக்கத்தினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவுகளும் நிகழ்ந்து வருகிறது இதனால் பல உயிரிழப்புகளும் நேர்ந்து வருகிறது, இந்நிலையில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் மம்மூட்டி தான் நடித்திருக்கும் ‘ஒரு குட்டநாடன் ப்ளாக்’ (Oru Kuttanadan Blog) படத்தின் ட்ரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் தற்போது நிலவிவரும் இந்த அசாதாரணமான சூழலில் இப்படி ஒரு செயலை மம்மூட்டி செய்திருப்பது அவரின் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. இதற்க்கு முன்னதாக மம்மூட்டி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என கூறிருந்தார்.

இதற்க்கிடையே கேரள மக்களுக்கு தமிழ் நடிகர்கள் உதவி வரும் நிலையில் கேரள நடிகர்கள் அவர்களை கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச் சாட்டும் நிலவியது. இப்படி தொடர் சிக்கலில் சிக்கியதால் நடிகர் மம்மூட்டி மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ 15 லட்சமும், துல்கர் சல்மான் ரூ 10 லட்சமும் வழங்கியுள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...