ரஜினியை பின்னுக்குத் தள்ளிய விஜய் சேதுபதி!

ஆகஸ்ட் 19, 2018 881

சென்னை (19 ஆக 2018): கேரளா பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் கொடுத்துள்ள நிலையில் சூபபர் ஸ்டாரான ரஜினியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அதேபோல வளைகுடா நாடுகளும் நிதியுதவிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் திரை நட்சத்திரங்களும் உதவி புரிந்து வருகின்றனர். நடிகர் சமீபத்தில் புகழ் பெற்ற நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். ஆனால் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினி வெறும் 15 லட்சம் ரூபாய்தான் நிதியுதவி அளித்துள்ளார். இதனால் நேற்று வந்த விஜய் சேதுபதி 25 லட்சம் வழங்கியுள்ளதற்கு பாராட்டு தெரிவிக்கும் மக்கள் அரசியலில் கால் பதிக்க நினைக்கும் ரஜினி வெறும் 15 லட்சம்தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...