தனுஷ் பட நடிகை புற்று நோயால் மரணம்!

August 20, 2018

மும்பை (20 ஆக 2018): பிரபல இந்தி நடிகை சுஜாதா குமார் புற்று நோய் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் சேகர் கபூரின் முன்னாள் மனைவி சுசித்ராவின் சகோதரி சுஜாதா குமார். இவர் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவிக்கு சகோதரியாக நடித்திருந்தார். இது தவிர தனுஷ் நடித்த ராஞ்சனா, கரன் ஜோஹரின் கோரி தேரே பியார் மெய்ன், சலாம்-இ-இஷ்க் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹோட்டல் கிங்ஸ்டன், பாம்பே டாக்கிங் ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் அதற்காக சிகிச்சையும் பெற்றுவந்தார். மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதால் நேற்று இரவு மரணமடைந்தார். இச்செய்தியை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!