வீதிகளில் காய்கறி விற்கும் பிரபல நடிகை!

August 25, 2018

மும்பை (25 ஆக 2018): பிரபல நடிகை அடா ஷர்மா மும்பையில் காய்கறி விற்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியவர் அடா சர்மா. தமிழ் பெண்ணான இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவர் இந்தியில், ‘1920’, ‘பீர்’, ‘ஹார்ட் அட்டாக்’ உட்பட சில படங்களிலும் தெலுங்கு, கன்னட மொழிகளில் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக நடிகை அடா சர்மா காய்கறி விற்கும் பெண்ணாக மாறியுள்ளார். இதற்காக இவருக்கு மும்பையில் பந்தாரா என்ற இடத்தில் இருக்கும் காய்கறி சந்தையில் டெஸ்ட் ஷூட் எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் காய்கறி விற்கும் பெண்ணாகவே மாறியுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!