கண்ணடிச்சது தப்பா - விளாசிய உச்ச நீதிமன்றம்!

ஆகஸ்ட் 31, 2018 620

புதுடெல்லி (31 ஆக 2018): கண்ணடிச்சதை எல்லாம் ஒரு வழக்காக கொண்டு வர வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மலையாள படம் ஒன்றின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. அதில் மாணிக்க மலராய பூவே என்ற பாடலில் துணை நடிகையான கல்லூரி மாணவி பிரியா வாரியர் நடித்திருந்தார். இதில் காதலனை பார்த்து பிரியா வாரியர் கண் சிமிட்டி, புருவங்களை அசைத்து, முகத்தில் காதல் ரசம் ததும்ப பாவனை காட்டுவார். இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானதுல்.

இந்நிலையில், இந்த காட்சி மத உணர்வுகளை புண்படுத்துவதாக ஐதராபாத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரியா வாரியரின் கண் சிமிட்டல் காட்சியில் எந்த உள்நோக்கமோ, இழிவுபடுத்தும் நோக்கமோ இல்லை என்றும் இதையெல்லாம் ஒரு வழக்காக கொண்டு வரவேண்டாம் என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...