நடிகர் சிம்புவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

செப்டம்பர் 01, 2018 647

சென்னை (01 செப் 2018): வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் ஜப்தி செய்யப் படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை ஹீரோவாக வைத்து "அரசன்" என்ற படத்தை எடுக்க ஒப்பந்தம் செய்தோம். அதற்காக அவருக்கு முன் பணமாக ரூ.50 லட்சம் அளித்தோம். ஆனால் அவர் படத்தில் நடிக்காமல், காலம் தாழ்த்தி வந்தார். இதனால் எங்கள் நிறுவனத்திற்க்கு பெரிய நஷ்டம் ஏற்ப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து பணத்தையும், அதற்க்கான வட்டியும் வாங்கி தர வேண்டும் என பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், முன்பணமாக வாங்கிய ரூ.50 லட்சம் மற்றும் அதற்க்கான வட்டி தொகையும் சேர்ந்து மொத்தம் ரூ.85.50 லட்சத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு திருப்பி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் குற்றம் சாட்டப்பட்ட சிம்புவின் வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என நீதிபதி எச்சரித்தார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...