கேரளாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ 1 கோடி நிதியுதவி!

செப்டம்பர் 03, 2018 624

நியூயார்க் (03 செப் 2018): கேரள வெள்ள பாதிப்புக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. கேரள மாநிலத்திற்கு பல தரப்பினரும் உதவி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளா மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியில் இந்த தகவலை தெரிவித்தார். கேரளாவில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதற்காக தாமும், தம்முடைய இசைக்குழுவும் சேர்ந்து இந்த நிதியை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...