நடிகர் ரஜினியின் அண்ணன் மனைவி மரணம்!

September 03, 2018

பெங்களூரு (03 செப் 2018): நடிகர் ரஜினியின் அண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ரஜினியின் பெற்றோர் சிறு வயதிலேயே காலமானதால், அண்ணன் சத்ய நாராயணாராவ், அவரது மனைவி கலாவதி பாய். இவர்களது அரவணைப்பிலேயே ரஜினி வளர்ந்து வந்தார். பின்பு பெரிய நடிகரானதும் சென்னையில் செட்டில் ஆனார். ஆனால் இரு குடும்பத்தினருக்கும், பாசம் தொடர்ந்து இருந்து வந்தது.

இந்நிலையில் அண்ணி கலாவதிபாய்க்கு கடந்த சில காலங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு போன்ற கோளாறுகளால் பாதிக்கப்பட்டார். இதற்காக பெங்களூரிவிலேயே ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையும் எடுத்து கொண்டார்.

ஆனாலும் கலாவதிபாய்க்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் இரவு 11.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

அண்ணி மரண செய்தி கேள்விப் பட்ட ரஜினி பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!