பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மரணம்!

செப்டம்பர் 05, 2018 773

சென்னை (05 செப் 2018): பிரபல நகைச்சுவை நடிகரும் பலகுரல் மன்னனுமான ராக்கெட் ராமநாதன் உடல் நலக்குறைவால் காலமானார்.

தொலைக்காட்சியிலும், பொது நிகழ்ச்சிகளிலும் ‘பல குரல்’ (மிமிக்ரி) மன்னனாக விளங்கியவர் ராமநதாதன். ஒரு பிஸ்கட் டின்னை வைத்துக் கொண்டு பல வருடங்கள் மேடை நிகழ்ச்சிகளை நடத்தியவர். 1970-களில் அமெரிக்கா ராக்கெட் விட்ட சமயம், கவிஞர் வில்லிப்புத்தன், ‘ராக்கெட்’ என்று அடைமொழி வைத்துக்கொள், கொஞ்சம் வேகமாக இருக்கும் என்று சொல்ல, அன்றிலிருந்து ‘ராக்கெட் ராமனாதன்’ ஆனார்.

74 வயதான இவர் ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில் யானை உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழக அரசின் கலைமாமணி நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகளையும் பெற்றவர்.

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த இவருக்கு பானுமதி என்ற மனைவியும், சாய்பாலா என்ற மகளும், சாய்குரு பாலாஜி என்ற மகனும் உள்ளனர். இவரது உடல் நல்லடக்கம் இன்று மாலை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

ராமநாதன் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...