நடிகர் விஜய் - தனுஷ் மோதல்!

September 05, 2018

சென்னை (05 செப் 2018): தீபாவளிக்கும் நடிகர் விஜயின் 'சர்க்கார்' திரைப்படமும், தனுஷின் என்னை 'என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படமும் நேரடியாக மோதிக் கொள்கின்றன.

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கின்றார். மேலும், இயக்குனர் செந்தில் வீராசாமி முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார்.

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ பி.மதனுடன் இணைந்து கெளதம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தர்புகா சிவா இசையமைத்து வரும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா – ஜோமன்.டி.ஜான் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

முன்னதாக இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் எதிர்பாரப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் துவங்கி விட்டதாகவும், கடந்த ஜூலை 20-ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் லோகோ-வை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தனர். இதை தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, படம் தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.படப்பிடிப்பு நிறைவு குறித்து ட்விட் செய்துள்ள இயக்குநர் கவுதம் மேனன், படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், தனுஷ், சசிக்குமார் மற்றும் படக்குழுவுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிக்கு ஏற்கெனவே சர்கார் மற்றும் என்ஜிகே ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் என்ஜிகே ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் சர்காருக்கு நேரடி போட்டியாக எனை நோக்கி பாயும் தோட்டா களம் இறங்க உள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!