நடிகர் சங்கம் புறக்கணிப்பு - பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்!

September 06, 2018

சென்னை (06 செப் 2018): பிரபல நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா வறுமையின் காரணமாக சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த பிரபல காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா. இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு என்று நகைச்சுவை நடிகர்களுடன் நடித்த பிரபலமான இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததார்.

சினிமா வாய்ப்புகள் இல்லாததால் தனது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டியில் வசித்து வந்தார். சிகிச்சைக்கு கையில் பணம் இல்லாமல் அவதிப்பட்ட அவர் மாவட்ட ஆட்சியரிடம் நிதியுதவிக்காக கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நோய் முற்றிப்போன நிலையில் அவர் தனது 80 வயதில் இன்று மரணமடைந்தார்.

லூஸ் மோகன், குள்ளமணி, அல்வா வாசு என பல நடிகர்கள் தங்களின் கடைசி காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் மரணமடைந்த நிலையில், நடிகர் சங்கம் நலிவுற்ற கலைஞர்களுக்கு நிதியுதவி செய்யுமா என்று கேள்வி சக திரை கலைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!