ஹோட்டல் அறையில் நடிகை மர்ம மரணம்!

செப்டம்பர் 06, 2018 632

கொல்கத்தா (06 செப் 2018): பிரபல பெங்காலி டி.வி.நடிகை ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டலின் அறையில் மேற்குவங்காள மாநில நடிகையான பாயெல் சக்ரபோர்டி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பாயெல் நேற்று மாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் இளம் நடிகையின் மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...